ஜெ.வை அட்மிட் பண்ணது கூட எனக்கு தெரியாது – குண்டை தூக்கி போட்ட ஓபிஎஸ் | Jayalaithaa

இந்தியாவில் இருந்த வலிமையான தலைவர்களுள் ஒருவர் ஜெயலலிதா. ஒரு பெண்ணாக இருந்து அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத தை கட்டிக் காத்து இரும்பு பெண்மணியாக இருந்தவர். அரசியல் சாணக்கியராக இருந்த கலைஞரை எதிர்த்து 6 முறை முதலமைச்சராக இருந்தார். 1972ல் எம்ஜிஆர் அவர்களால் கட்சியில் இணைக்கப்பட்டு, கொள்கை பரப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் என படிப்படியாக உயர்ந்து 1989ல் எதிர்கட்சித்தலைவராக உயர்ந்து 1991ம் ஆண்டு முதன் முறையாக முதலமைச்சர் ஆனார். இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பல முன்னோடி திட்டங்களை நடைமுறைப்படுத்திய பெருமை ஜெயலலிதா அவர்களுக்கு உண்டு.

ஜெ.வை அட்மிட் பண்ணது கூட எனக்கு தெரியாது - குண்டை தூக்கி போட்ட ஓபிஎஸ் | Jayalaithaa 1

விளம்பரம்

அப்படிப்பட்ட மாபெரும் தலைவர் டிசம்பர் 5, 2016ம் ஆண்டு இரவு மறைந்தார். செப்டம்பர் 22ம் தேதி இரவு காய்ச்சல் என அப்பலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறுதியில் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதில் பெரிய சந்தேகத்தை கிளப்பியது என்னவென்றால் 75 நாட்களாக ஜெயலலிதா அவர்களை யாருமே சந்திக்கவில்லை. எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், அப்போதை ஆளுநர், துணை குடியரசுத் தலைவர் எனத் தொடங்கி தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும் மருத்துவமனைக்கு சென்றும் ஜெயலலிதா அவர்களை பார்க்க முடியவில்லை. சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப்பிறகு தனித்து செயல்பட்ட ஓபிஎஸ் ஜெ இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அப்போது புயலை கிளப்பினார். Youtube video code embed credits: Polimer News

ஜெ.வை அட்மிட் பண்ணது கூட எனக்கு தெரியாது - குண்டை தூக்கி போட்ட ஓபிஎஸ் | Jayalaithaa 2

விளம்பரம்

பின்பு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி இணைக்கப்பட்ட பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ஓய்வு பெற்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் வைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜராகவே இல்லை. பல முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று இவர் ஆஜராகியுள்ளார். அதில் அவர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று தான் ஊரில் இருந்ததால் அவர் ஏன் அனுமதிக்கப்பட்டார் என்பது தனக்கு தெரியாது என்றும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை நான் நேரில் பார்க்கவேயில்லை என்றும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன என்பது எனக்கு தெரியாது என்றும், அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது மட்டும்தான் தனக்கு தெரியும் என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண...Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment