முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. வெளியான கிளைமாக்ஸ் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது,

கட்டாயம் படிக்கவும்  உங்களை மாமான்னு கூப்பிடலாமா என சரவணனிடம் பேசும் சரண்யா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. வெளியான கிளைமாக்ஸ் புகைப்படம் 1

விளம்பரம்

தற்போது பல பிரச்சனைகளுக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது.மேலும் மூர்த்தி மற்றும் கண்ணனுக்கு குழந்தையும் பிறந்துள்ளது,இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்,பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கட்டும் புதிய வீட்டின் கிரஹப்பிரவேசம் நடைபெற்று உள்ளது.அனைவரும் சந்தோசமாக உள்ளனர்.பிரசாந்த் மாமனார் மற்றும் அவரது நண்பரை கொலை செய்ய முயற்சிக்கிறார் மேலும் தன்னையும் தாக்கி கொண்டு பழியை தூக்கி ஜீவா மேல் போடுகிறார்,அங்கு போலீஸ் வரவே ஜனார்த்தன் உயிரோடு இருப்பதை தெரிந்துகொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்,அங்கு பிரசாந்த் அழுது நாடகம் போடுகிறார்.பிரசாந்த் ஜீவா மேல் போட்ட பழியை நம்பிய மீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. வெளியான கிளைமாக்ஸ் புகைப்படம் 2

விளம்பரம்

மீனாவிற்கு பிரசாந்த் மீது சந்தேகம் வரவே,அதனை மூர்த்தியிடம் வந்து கூறுகிறார்,பிரசாந்தை பிடிப்பதற்கு மூர்த்தி தனது குடும்பத்துடன் திட்டம் தீட்டுகிறார்.ஆள் இல்லாத சமயம் ஜனார்த்தனை கொல்ல செல்லும் பிரசாந்தை பிடிக்கிறார் மூர்த்தி,அவரை சிறைக்கு அனுப்பி தம்பிகளை காப்பாற்றுகிறார்.அதே சமயம் ஜனார்த்தனும் மருமகன் ஜீவாவை பற்றி தெரிந்துகொள்கிறார்.இப்படி குடும்பம் ஒன்றாக சேர்ந்து இருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்துள்ளது ,அவர்கள் இறுதியாக எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment