ராகவா லாரன்ஸ் படம்ன்னு சொல்லி கூட்டிட்டு போய்ட்டு..நடிகையின் எமோஷனல் பேட்டி | Pandiyan Stores

இரவு 8 மணி ஆனாலே பல வீடுகளில் ஒலிக்கும் தொடர்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் ஆனந்தம் படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்டது என நெட்டிசன்கள் கலாய்த்தாலும், இந்த தொடரை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. மளிகை கடை நடத்தி வரும் அண்ணன் தம்பிகளின் உறவு குறித்த கதை. குடும்ப பாங்கான கதை என்பதால் நல்ல ரீச் கிடைத்துள்ளது.

ராகவா லாரன்ஸ் படம்ன்னு சொல்லி கூட்டிட்டு போய்ட்டு..நடிகையின் எமோஷனல் பேட்டி | Pandiyan Stores 1

விளம்பரம்

இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் VJ தீபிகா. இவர் கண்ணன் என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்து வந்தார். இவர் திடீரென நாடகத்திலிருந்து விலகினார். அதற்காக சொல்லப்பட்ட காரணம் அதிர்ச்சியாக இருந்தது. முகத்தில் அதிக அளவில் பரு வந்த காரணத்தால் அவரை நாடகத்திலிருந்து நீக்கிவிட்டதாக தகவல்கள் பறந்தன. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான தீபிகா மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பினார். தற்போது யூடியூப் சேனல் வைத்து Vlogs செய்து வருகிறார். Youtube Video Code Embed Credits: Avalglitz

ராகவா லாரன்ஸ் படம்ன்னு சொல்லி கூட்டிட்டு போய்ட்டு..நடிகையின் எமோஷனல் பேட்டி | Pandiyan Stores 2

விளம்பரம்

தற்போது அவர் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் வேலை தேடி அலைந்தபோது ராகாவா லாரன்ஸ் படத்திற்கு ஆள் தேவை என்று அழைப்பு வந்ததாகவும், அங்கு போன இடத்தில் யாருமே இல்லாத தனி அறையில் லிப் லாக் சீனில் நடித்துக்காட்ட தான் மிகவும் வற்புறுத்தப்பட்டதாகவும் கூறினார். ஆனால் எப்படியோ தப்பித்து வந்துவிட்டதாகவும் அவர் கூறினார். தன் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய மோசமான அனுபவம் என்றும் அவர் கூறினார். மீடியாவில் வேலை பார்க்கும் பெண்கள் எப்படி துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்றும் அவர் எமோஷனல் ஆக கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment