ரிஷப் பண்ட்டிற்கு ரிக்கி பாண்டிங் ஆதரவு..இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் தகுதியானவர் என ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

ஐபிஎல் 2022 போட்டி மார்ச் மாதம் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடி பலபரீட்சை நடத்தி வருகிறது.இந்நிலையில் நேற்று டெல்லி அணியும் மும்பை அணியும் நேருக்கு நேர் மோதியது.இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என நெருக்கடியுடன் டெல்லி அணி மும்பை அணியுடன் மோதியது.டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களம் இறங்கிய டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.பின்னர் பேட்டிங் செய்த மும்பை அணி சிறப்பான விளையாட்டை ஆடி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்களை எடுத்து டெல்லி அணியை தோற்கடித்தது.இதனால் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது.

ரிஷப் பண்ட்டிற்கு ரிக்கி பாண்டிங் ஆதரவு..இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் தகுதியானவர் என ரிக்கி பாண்டிங் நம்பிக்கை 1

விளம்பரம்

டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூறியதாவது, டிம் டேவிட் அடித்த பால் பேட்டின் மீது உரசியதாக நான் உணர்ந்தேன் ஆனால் இதுகுறித்து ரிவியூ ஏதும் நான் கேட்கவில்லை என கூறியுள்ளார்.இந்நிலையில் டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ரிஷப் பண்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ,இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங் கூறியதாவது,தன் தவறினால் தான் அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளதாக ரிஷப் நினைக்கிறார்,அவர் ஒரு நல்ல கேப்டன்,அவர் அணியை வழிநடத்துவதை நாங்கள் பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்

ரிஷப் பண்ட்டிற்கு ரிக்கி பாண்டிங் ஆதரவு..இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் தகுதியானவர் என ரிக்கி பாண்டிங் நம்பிக்கை 2

விளம்பரம்

மேலும் சில நேரங்கள் ஆட்டம் உங்கள் வழியில் செல்லாது இதுபோன்ற சூழ்நிலைகளை நான் கடந்து விட்டேன், நீங்களும் உங்கள் வழியில் செல்லுங்கள் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.ரிஷப் விளையாட்டை பின்னாடி இருந்து கற்றுக்கொள்பவர் இது போன்ற தடுமாற்றங்கள் விளையாட்டில் ஏற்படுவது சகஜம் அந்நிலையில் உங்களை நீங்கள் சந்தேகிக்காமல் இருப்பதே மிக முக்கியம், ரிஷப் வலுவாக மீண்டும் திரும்புவார் என்றும் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் தகுதியானவர் என ரிக்கி பாண்டிங் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment