பிச்சைக்காரன் 2 – திரை விமர்சனம்(?/5)

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் பிச்சைக்காரன்,இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை விஜய் ஆண்டனி இயக்கி நடித்தும் உள்ளார்,இப்படத்தில் இயக்கம், எழுத்து, இசை, எடிட்டிங்,என முழு வேலைகளையும் தனியொருவனாக விஜய் ஆண்டனி அசத்தியுள்ளார்.இன்று இப்படம் வெளியாகி உள்ளது,இப்படத்தின் விமர்சனத்தினை கீழே காணலாம்

பிச்சைக்காரன் 2 - திரை விமர்சனம்(?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

கோடிஸ்வரன் மற்றும் பிச்சைக்காரன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி,எதிரிகளின் சில வேலைகளினால் பணக்கார விஜய் ஆண்டனி இடத்திற்கு பிச்சைக்காரன் விஜய் ஆண்டனி வருகிறார்.மேலும் பிச்சைக்காரன் விஜய் ஆண்டனிக்கு தங்கை ஒருவர் இருக்கிறார், தனது தங்கையை தொலைக்கும் இவர் பணக்கார விஜய் சேதுபதி செல்வாக்கை பயன்படுத்தி கண்டுபிடித்தாரா,பணக்கார வாழ்க்கையை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதே படத்தின் மீதி கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீருடன் விடுமுறைக்கு கோவா சென்ற பாவனி ரெட்டி

பிச்சைக்காரன் 2 - திரை விமர்சனம்(?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

புது கதையினை தேர்ந்தெடுத்து கையாண்டதற்கு விஜய் ஆண்டனிக்கு பெரும் பாராட்டுக்கள்,புது கதையாக இருந்தாலும் எதோ குறைவது போல உள்ளுணர்வு ஏற்படுகிறது.பணக்காரன் மற்றும் பிச்சைக்காரன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் அதற்கேற்ற முக பாவனைகள் உடன் நடித்து அசத்தியுள்ளார்.படம் முழுவதும் வரும் விஜய் ஆண்டனி அதற்காக உழைக்க தவறிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.கதாநாயகியாக வரும் காவ்யா வழக்கமான கதாநாயகி போல காணாமல் செல்கிறார்,தேவ் கில், ஜான் விஜய், மன்சூர் அலி கான், யோகி பாபு என பலர் நடித்தும் எந்த கதாபாத்திரமும் அழுத்தம் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதி தொய்வை தான் ஏற்படுத்துகிறது.இப்படத்தில் அதிகமாக செண்டிமெண்ட் காட்சிகளை வைத்து ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்,எடுத்துக்கொண்ட கதை நன்றாக இருந்தாலும் அதனை கொண்டு போய் சேர்க்க தவறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

பிச்சைக்காரன் 2 படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2.5/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment