கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.மேலும் தனது அடுத்த படத்தில் இவரே ஹீரோ ஆக முடிவு செய்து லவ் டுடே என்ற படத்தினை இயக்கி தற்போது ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார். அண்மையில் இப்படம் வெளியாகி பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இவரின் முதல் படமான கோமாளி படத்தில் ஜெயம் ரவி தங்கையாக நடித்தவர் தான் ஆனந்தி.இவர் வானொலி ஒன்றில் ஆர் ஜே வாக பணியாற்றி வருகிறார். தற்போது தனக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குனரையே திட்டி தீர்த்துள்ளார்.இது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.இந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது,லவ் டுடே படத்தில் ஆண்கள் நல்லவர்களாகவும்,பெண்களை கெட்டவர்களாகவும் காமெடி என காண்பித்துள்ளார் பிரதீப்.படத்தில் கதாநாயகி தங்கைக்கு பிரதீப் மெசேஜ் அனுப்பவில்லை என்பதை நிரூபிக்கிறார்.
இதில் இவர் நல்லவர் ஆனால் பிரபல நடிகையை பதம் பார்க்கணும் என்று கூறும் பொழுது இதனை காமெடி என ரசிகர்கள் எப்படி நினைக்கிறார்கள் இப்படி பெண்களை சினிமாவில் தவறாக சித்தரிப்பதினை எத்தனை நாட்கள் தான் இன்னும் பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டும்,என கூறி கடுமையாக விமர்சித்துள்ளார்.