வெற்றிபெற்றானா இந்த ருத்ரன் – திரைவிமர்சனம் (?/5)

முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வருபவர் லாரன்ஸ்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதிலும் குறிப்பாக குழந்தைகள் ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்றே கூறலாம்.தற்போது இவர் இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் பைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் ருத்ரன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் பூர்ணிமா பாக்யராஜ் நாசர் காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே விமர்சனத்தில் காணலாம்.

வெற்றிபெற்றானா இந்த ருத்ரன் - திரைவிமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

படத்தில் லாரன்ஸ் நாசர் மற்றும் பூர்ணிமா பாக்யராஜின் மகனாக வருகிறார்.வழக்கமான கதாநாயகன் போல் துறுதுறுவென இருக்கும் லாரன்ஸ் நாயகி ப்ரியாவை கண்டு காதலில் விழுகிறார் மேலும் அவரை கல்யாணமும் செய்கிறார்.இந்நிலையில் நாசர் தனது நண்பன் ஒருவருக்கு 6 கோடி ரூபாய் கடன் வாங்கி கொடுக்கவே அதை வாங்கி கொண்டு நண்பன் நாசரை ஏமாற்றி விடுகிறார்.இதனை தாங்க முடியாத நாசர் இ ற ந்தும் விடுகிறார்.பின்னர் அப்பாவின் கடனை அடைக்க அவரது ட்ராவல்ஸ் நிறுவனத்தை விற்று 3 கோடியை கொடுத்துவிட்டு வெளிநாட்டுக்கு உழைக்க செல்கிறார்.வெளிநாட்டில் உழைத்து விட்டு வீட்டிற்கு வர இருக்கும் நிலையில் அம்மா பூர்ணிமா இ ற க்கிறார் அதே சமயம் மனைவி ப்ரியாவையும் காணவில்லை.இதுகுறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைகிறார் லாரன்ஸ்.அம்மா இறக்க காரணம் என்ன ,பிரியா பவானி சங்கரை கடத்தியது யார்,யார் கடத்துவது என்பதை கண்டுபிடிப்பதே மீதி படத்தின் கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  பேச்சுலர் பட கதாநாயகி திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

வெற்றிபெற்றானா இந்த ருத்ரன் - திரைவிமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

பல சினிமாவில் வந்த கதையையே மீண்டும் மீண்டும் எடுத்து கொண்டிருப்பது ரசிகர்கள் எரிச்சலை ஊட்டுகிறது.அந்த வகையில் ருத்ரன் மட்டும் விதி விலக்கல்ல.இயக்குனர் கதிரேசன் சொல்ல வந்த கதை சரி ஆனால் அதற்கு திரைக்கதையை சரியாக அமைக்காமல் சென்றது தான் படத்தின் மிகப்பெரிய மைனஸ்.மேலும் சண்டை காட்சிகள் நம்புவது போல வடிவமைத்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.லாரன்ஸ் தனக்கான கதாபாத்திரத்தினை சரியாக செய்துள்ளார் மேலும் கதாநாயகியாக வரும் ப்ரியாவும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்,நடிகர்கள் அனைவரும் தங்களது நடிப்பினை முறையாக செய்துள்ளது பாராட்டுக்குரியது.முதல் பாதி தொய்வாக இருந்தாலும் இரண்டாவது பாதி வேகமாக நகருவது பாராட்டுக்குரியது.ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது,பாடலுக்கு ஏற்றாற்போல லாரன்ஸ் மாஸ்டர் நடனம் வியக்கவைக்கின்றன.மொத்தத்தில் இப்படம் லாரன்ஸ் மாஸ்டருக்கு நான்கு வருடம் கழித்து வெளியே வரும் படம் இது இல்லை

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா ஹிந்தி பாடலுக்கு ம ர ண குத்து

ருத்ரன் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் -2.5/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment