சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.அப்பொழுது வரை இவர் இவ்வளவு பெரிய நடிகையாக உருவெடுப்பாரா என்பது யாருக்கும் தெரியாது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் வருகிறார்.
இந்நிலையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.சாய் பல்லவி நிகழ்ச்சி முடித்துவிட்டு காரில் ஏறும்பொழுது ரசிகர்கள் சுற்றிக்கொண்டனர்,அங்குள்ள ரசிகர்கள் கொடுத்த பரிசுகளை வாங்கி மற்றும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த பொழுது கூட்டம் அதிகரித்ததால் சாய் பல்லவி பாதுகாப்பு கேள்விக்குறியாகியது,இதனால் பயந்து அஞ்சி நடுங்கியுள்ளார் சாய்பல்லவி,இந்த வீடியோ பழைய ரசிகர்கள் ஷேர் செய்து மீண்டும் வைரலாக்கி வருகின்றனர்
Embed video credits : MANA STAR