The Indian Times

என் தாய் மொழி இதுதான்…உண்மையை கூறிய நடிகை Saipallavi

2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார் சாய்பல்லவி .ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருகிறார் இவர் முதன் முறையாகபின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.ப்ரேமம் படம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது,முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அசினிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது.பின்னர்தான் அவர் நடிக்க முடியாமல் போகவே அந்த வாய்ப்பு சாய் பல்லவிக்கு வந்தது.தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Advertisement

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் இவர் நடித்து வருவதால் இவர் எந்த மாநிலத்தினை சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது,முன்னே இவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுபற்றி தகவலை தெரிவித்துள்ளார்.இவர் ஊட்டியில் பிறந்தவர் எனவும் தனது தாய் மொழி தமிழ் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழகத்தினை சேர்ந்த பெண் பல மொழி சினிமாவையும் கலக்கி வருவது மகிழ்ச்சியை தருவதாகத்தான் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

Embed video credits : behindwoodstv

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in