வீடு திரும்பிய சஞ்சீவை கட்டியணைத்து முத்தமிட்ட மகள்! கண்கலங்கி அழுத சஞ்சீவ்! Sanjiv Welcoming Home After Bigg Boss

பிக் பாஸ் வீட்டில் வைல்டுக்கார்டு போட்டியாளராக வந்து வீட்டில் ஒரு கலக்கு கலக்கியவர் தான் சஞ்சீவ்! இவரது விளையாட்டின் மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்திருந்தது உண்மையே! ஏனெனில் பல ஆண்டுகளாக சின்னத்திரையில் நாடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு முகம்! அதுமட்டுமில்லாமல் பிரபல நடன நிகழ்ச்சி ஒன்றையும் அவர் தொகுத்து வழங்கி வந்ததால் ஒரு காலத்தில் புகழின் உச்சியில் நின்று கொண்டு இருந்தார்! தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் இவரது வீட்டு வாசலை தட்டினாலும் இவருக்கு சினிமாவின் மேல் மட்டுமே ஆர்வம் அதிமாக இருந்தது தெரியவந்தது!

வீடு திரும்பிய சஞ்சீவை கட்டியணைத்து முத்தமிட்ட மகள்! கண்கலங்கி அழுத சஞ்சீவ்! Sanjiv Welcoming Home After Bigg Boss 1

விளம்பரம்

சிறிது காலம் சீரியல்களை ஒதுக்கிவிட்டு வந்த நிலையில் திடீரென பிக் பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார்! இந்நிலையில் இவர் என்னென்ன செய்ய போகிறாரோ என்ற மக்களின் கேள்விகளை நிவர்த்தி செய்யும் அளவுக்கு இவரது கணிப்பும் செயலும் முதல் வாரம் முதல் தெரியவந்தது! பிறகு ஒவ்வொரு நாள் மற்றும் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளையாடி இறுதி சுற்றுக்கு இவர் செல்ல தகுதியானவர் தான் என மக்கள் இவரை புகழும் வகையில் இவரது செயல்கள் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது! இத்தகைய நிலையில் குடும்பங்கள் சந்திக்கும் நிகழ்ச்சியின் போது மக்களுக்கு தெரிந்த சஞ்சீவாக இல்லாமல் ஒரு பிள்ளைகளின் தகப்பனாய் அவர்களை பிரிந்து இருந்ததில் துவண்டு கிடந்த தந்தையின் உள்ளத்திலிருந்து வடிந்த கண்ணீர் துளிகள் பார்த்த ஒவ்வொரு மக்களின் மனதிலும் அன்பையும் அழுகையையும் தூண்டியது!

வீடு திரும்பிய சஞ்சீவை கட்டியணைத்து முத்தமிட்ட மகள்! கண்கலங்கி அழுத சஞ்சீவ்! Sanjiv Welcoming Home After Bigg Boss 2

விளம்பரம்

பிக் பாஸ் முடிவடைய இருக்கும் நிலையில் போட்டிகள் கடுமையாக மற்றவர்களின் ரசிகர்களை கணக்கிடும் போது இவரது வாக்குகள் குறைவாக இருந்ததன் காரணமாக இவர் வெளியேற்றப்பட்டார் என்பதும் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே! இந்நிலையில், பிக் பாஸுக்கு பிறகு, இவர் வீடு திரும்பியதும் இவரது மகள் மற்றும் மகனை பார்த்து கட்டியணைத்து முத்தமழை பொழிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below….

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment