The Indian Times

பனி பிரதேசத்தில் விடுமுறையை கொண்டாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தங்கமயில்

ஆயுத எழுத்து என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை சரண்யா.ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் நடிப்பில் களம் இறங்கினார்.

இவருக்கு முதல் சீரியலே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.அதனை தொடர்ந்து நெஞ்சம் மறப்பதில்லைதொடரிலும் நடித்துள்ளார்.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரன் தொடரிலும் இவர் நடித்து வருகிறார்.

Advertisement

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகிய சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகினார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சம் பாலோயர்களை வைத்துள்ளார் சரண்யா.

இதில் அவ்வப்பொழுது தனது ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவருக்கு சின்னத்திரையில் குறிப்பட்ட அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ல் நடித்து வருகிறார் சரண்யா. இவர் விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in