சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் திலகம் என்று கூறினால் உடனே நியாபகம் வருவது சிவாஜி கணேசன் தான்.அது இந்த காலத்திற்கும் பொருந்தும்.இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும்.ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்ததால் தனது பெயரை சிவாஜி கணேசன் என மாற்றிக்கொண்டார்.நடிப்பில் வரலாறை படைத்தவர் இவர் என்று கூறினால் தான் சரியாக இருக்கும் அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையால் மக்களை கவர்ந்தவர் இவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார்.இதில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் இவர் ஆவார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம் 1

விளம்பரம்

இவருக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போதைய நடிகர்கள் இவரை பார்த்துதான் நடிப்பை கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு நடிப்புத்திறமையால் பெயர் வாங்கியவர் சிவாஜி கணேசன்.80 மற்றும் 90 களிலேயே பத்ம ஸ்ரீ விருது,
பத்ம பூஷன் விருது, தாதாசாகெப் பால்கே விருது, ஆகியவைகளை பெற்றவர்.தற்போது இவரின் பேரன் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவருக்கு பிரபு மற்றும் ராம்குமார் கணேசன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.இதில் பிரபு 90களில் கதாநாயகனாக பல வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தியவர்,அதேபோல் ராம்குமாரும் சில படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம் 2

விளம்பரம்

பொதுவாகவே நடிகர்களின் தீவிர ரசிகர்கள் அவர்களை போலவே தோற்றத்திற்கு மாறுவார்கள்,குறிப்பாக நடை உடை பாவனை என எல்லாம் தனக்கு பிடித்த நடிகர் ஆகவே தங்களை மாற்றிக்கொள்வார்கள்.அப்படி பலரையும் பார்த்திருக்கிறோம்,ஆனால் தற்போது சிவாஜி போலவே அச்சு அசல் இருக்கும் நபரின் வீடியோ இணையத்தில் பரவி பெரும் ஆச்சரியத்தினை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.இவர் கடலூரை சேர்ந்த கண்ணன் ஆவார்,இவர் சிவாஜி போல திருமண விழாவில் நடித்து அசத்தியுள்ளார்.பார்ப்பவர்களே சிவாஜி தான் உண்மையாக வந்துவிட்டார் போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

Embed video credits: kalaignar TV NEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment