இயக்குனர் வெற்றிமாறன் படப்பிடிப்பில் பெரும் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு

நடிகர் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் மூலம் நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்.இப்படத்தில் இவருடன் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.மேலும் படம் எப்பொழுது வெளியாகும் என வெற்றிமாறன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் மிரட்டும் VIJAYTV சீரியல் GABY-ன் அழகிய புகைப்படங்கள்

இயக்குனர் வெற்றிமாறன் படப்பிடிப்பில் பெரும் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு 1

விளம்பரம்

இப்படத்தின் படப்பிடிப்பில் சண்டை பயிற்சி நடைபெற்று வந்தது.ரயில் மூலம் செல்வது போல காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.படப்பிடிப்பில் பயன்படுத்திய கிரேன் திடீரென அறுந்து விழுந்தது.கிரேன் மீது நின்றுகொண்டிருந்த 59வயதான சண்டை பயிற்சியாளர் சுரேஷ் கீழே விழுந்துள்ளார்.அவரை அங்குள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.ஆனால் அவர் வரும் வழியிலேயே சுரேஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.இது படப்பிடிப்பில் பெரும் சொத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் CWC சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள்

இயக்குனர் வெற்றிமாறன் படப்பிடிப்பில் பெரும் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு 2

விளம்பரம்

அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.சினிமா ரசிகர்கள் இவர் தான் உண்மையான ஹீரோ என கூறி மறைந்த சுரேஷுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இந்த சம்பவம் ஸ்டண்ட் யூனியன் மற்றும் சினிமா உலகில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சில்லுனு ஒரு காதல் பட நடிகை பூமிகா கணவரின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : THANTHI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment