The Indian Times

நீதிமன்றத்தில் சரணடைந்த TTF வாசன்…. என்ன தலைவரே உங்களுக்கா இப்படி ஒரு சோதனை

இளைஞர்கள் பலரும் யூடியூப் சேனல் தொடங்கி அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம் சிலர் சினிமா வரை சென்றுள்ளனர்.சிலர் நல்ல வழியில் சென்றாலும் சிலர் தவறான உதாரணமாக மாறிவிடுகிறார்கள் இங்கு தான் பிரச்னையே உருவாகிறது.முன்னதாக யூடியூபில் பப்ஜி விளையாடி ஆபாசமாக பேசிய மதன் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் இருந்தார்.அவர் தற்போது சிறையில் இருந்து பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த்துள்ளார்.இந்நிலையில் தற்போது புதியதாக TTF வாசன் என்பவர் ஆபத்தான முறையில் பைக்குகளை ஒட்டி இளைஞர்களையும் ஆபத்தில் தள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement

யூடியூபில் TTF வாசன் என்பவர் பைக் ட்ராவல் சேனல் வைத்துள்ளார்.பைக்கிலேயே இந்தியா முழுவதும் சுற்றி அதனை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார்.இவரின் யூடியூப் பக்கத்தினை சுமார் 26 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சென்னையில் தனது ரசிகர்களை முதல் முறையாக வாசன் சந்திக்க வந்த பொழுது மிகப்பெரிய கூட்டமே கூடி போக்குவரத்து பாதித்ததால் போலீசார் அங்கு வந்து அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பினர்.அண்மையில் வாசன் பைக்கில் அதிகவேகமாக சென்றதாகவும் அதனால் விபத்துகள் நேரும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்

Advertisement

இந்நிலையில் அண்மையில் டிக் டாக் பிரபலமான ஜிபி முத்துவை நேரில் சந்தித்த வாசன் அவரை பைக்கில் அமர வைத்து வேகமாக சுமார் 150 கிமீ வேகத்தில் பைக்கை ஒட்டி சென்றுள்ளார்.இந்த வீடியோ பெருமளவு வைரலாகியது.இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் போத்தனுர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதன்படி தற்போது இன்று மதுக்கரை தாலுக்கா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வாசன் இன்று சரணடைந்தார்.மேலும் 2 பேர் உத்திரவாதம் அளிக்க தொடங்கியதை முன்னிட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in