வலிமை படத்தின் first look தேதி தள்ளிவைப்பு ! ஏமாற்றத்தில் ரசிகர்கள் . காரணம் என்ன தெரியுமா ?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் நடிகர் தல அஜித். தல அஜித்தின் அடுத்த படம் வலிமை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். போனி கபூரின் தயாரிப்பில் இயக்குனர் எச். வினோத்தின் அதிரடி த்ரில்லரில் போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்காக இசை இயக்குனர் யுவன் சங்கர் ராஜா மற்றும் DOP நீரவ் ஷா ஆகியோரையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. படக்குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டி உள்ளிட்ட இடங்களில் முக்கியமான காட்சிகளை சூட் செய்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகிய குஷி படத்தின் முதல் பாடல் வெளியாகியது

வலிமை படத்தின் first look தேதி தள்ளிவைப்பு ! ஏமாற்றத்தில் ரசிகர்கள் . காரணம் என்ன தெரியுமா ? 1

விளம்பரம்

அதுமட்டுமில்லாது ஸ்பெயின் நாட்டிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா குமகொண்டா, யோகி பாபு, குர்பானி, புகாஜ், அச்சியுத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருப்பது வலிமை படத்தின் first look காக தான். இந்த படத்தின் first look வருகிற மே 1 தல அஜித்தின் பிறந்த நாள் அன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

கட்டாயம் படிக்கவும்  SELFI எடுக்க வந்த ரசிகர் போனை தள்ளிவிட்ட நடிகர் ஷாருக்கான்

வலிமை படத்தின் first look தேதி தள்ளிவைப்பு ! ஏமாற்றத்தில் ரசிகர்கள் . காரணம் என்ன தெரியுமா ? 2

விளம்பரம்

ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் first look மே 1 அன்று வெளியிடப்போவதில்லை என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மக்கள் அனைவரும் பீதியில் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் first look வெளியிடுவது சரியாக இல்லை. மற்றொரு தேதிக்கு வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார் போனி கபூர். இதனால் மிகவும் சோகமடைந்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment