அப்பா..என்ன சேத்துக்கோங்கப்பா.. பேட்டியின் போது கண்கலங்கி அழுத வனிதா | Vanitha Vijayakumar

வனிதா விஜயகுமார், இந்த பெயரை கடக்காமல் நாம் சமூக வலைத்தளங்களை கடக்கவே முடியாது. அந்த அளவிற்க்கு சமீப காலமாக டிவியிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி, அடிக்கடி கேட்டு கொண்டு வரும் பெயர்தான் வனிதா. நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா இந்த தம்பதியின் மூத்த மகளான இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். மூன்று திருமணம் முடிந்த நிலையில் யாருடனும் வாழ பிடிக்காமல் அனைவரையும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். மகன் ஹரி விஜய்குமாருடன் வாழ்ந்து வரும் நிலையில் வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு இவரது குடும்பத்தாருக்கும் இடையில் சண்டை என்பதும், இவருடைய தந்தை விஜயகுமார் தொடங்கி, தங்கைகள் கூட இவரிடம் பேசுவது இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அப்பா..என்ன சேத்துக்கோங்கப்பா.. பேட்டியின் போது கண்கலங்கி அழுத வனிதா | Vanitha Vijayakumar 1

விளம்பரம்

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு இவர், தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் என்னும் 24 மணி நேரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் திடீரென அல்டிமேட்டிலிருந்து அதிரடியாக விலகிவிட்டார். விலகலுக்குப்பின் அவர் தனியார் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அதில் அவர் தான் வெளியேறியதற்கான காரணங்களை கூறினார். பிக்பாஸை விட்டு விலக காரணம் என்ன என கேட்டபோது, அந்த வீட்டில் சிலர் மோசமாக நடந்து கொள்கின்றனர் பிக்பாஸ் தவறான பாதையில் போய் கொண்டிருக்கிறது. அதனால்தான் கமல் சாரே இந்த நிகழ்ச்சியிருந்து சப்பைக் காரணம் கூறி விலகியுள்ளார் என்று அவர் குற்றம் சாட்டினார்.

அப்பா..என்ன சேத்துக்கோங்கப்பா.. பேட்டியின் போது கண்கலங்கி அழுத வனிதா | Vanitha Vijayakumar 2

விளம்பரம்

தற்போது நடிகர் பிரசாந்த் அவர்களின் தந்தையான தியாகராஜனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் வனிதா. அதில் தான் தனது அப்பாவுடன் இணைய நிறைய முயற்சிகள் எடுத்ததாகவும் ஆனால் சிலர் என்னை என் அப்பாவுடன் இணைய தடுக்கின்றனர் என்றும் அவர் கண்ணீர் மல்க கூறினார். மேலும் கபாலி படம் ஷூட்டிங் போது ரஜினியிடம் தான் அப்பாவுடன் சேர்த்து வைக்குமாறு பேசியதாகவும் ஆனால் அதற்கும் பயன் இல்லை என்றும் அவர் கண்ணீர் மல்க கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment