The Indian Times

வாப்பா வெற்றி நாயகா… விக்ரமனை ஆரத்தி எடுத்து வரவேற்ற தாய்குலங்கள்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பித்திலேயே போட்டியாளர்களிடம் சண்டை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டர் எலிமினேஷன் ஆகி சென்றார்.இரண்டாவது வாரத்தில் அசல் எலிமினேட் ஆகி சென்றார்.மூன்றாவதாக ஷெரின் சென்றார்.நான்காவதாக மகேஸ்வரி சென்றுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியே சென்றுள்ளார் .ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியேறியுள்ளார்,எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார் . ஒன்பதாவாக ஆயீஷா வெளியேறியுள்ளார்.பத்தாவதாக ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார். பன்னிரெண்டாவதாக மணிகண்டன் வெளியேறியுள்ளார். பதிமூன்றாவதாக ரட்சிதா வெளியேறியுள்ளார். பதினான்காவதாக ஏடிகே வெளியேறியுள்ளார். பதினைந்தாவதாக கதிரவன் வெளியேறியுள்ளார்.பதினாறு மற்றும் பதினேழாவது போட்டியாளராக அமுதவாணன் மற்றும் மைனா வெளியேறியுள்ளனர்.

Advertisement

விக்ரமன்,அசீம் மற்றும் ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.இறுதியாக ஷிவின் மூன்றாவது இடத்தினையும் , விக்ரமன் இரண்டாவது இடத்தினையும் அசீம் முதலிடத்தினையும் பிடித்தார்கள்.விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றிபெற்றுள்ளது ரசிகர்களுக்கு சொத்தினை ஏற்படுத்தியுள்ளது.அதன்படி வீடு திரும்பிய விக்ரமனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது,தாய்குலங்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு மரியாதை செய்துள்ளனர்,இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் உண்மையான வெற்றி என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in