மறைந்த நடிகர் வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை நானே ஏத்துக்கிட்டேன் – அவங்க குடும்பத்துக்கு நான் இருக்கேன் – விஷ்ணு விஷால் பேட்டி

சிறந்த நடிகர்களில் ஒருவராக சினிமாவை வலம் வருபவர் விஷ்ணு விஷால். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுத்தந்தது.முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நிரந்தர இடத்தினை பிடித்தார் விஷ்ணு விஷால்.தொடர்ந்து தமிழில் படம் நடிக்க தொடங்கிய விஷ்ணுவிஷாலுக்கு சில படங்கள் தோல்வியை தந்தாலும் பல படங்கள் நல்ல வரவேற்பினை அளித்து வருகிறது.வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின்னர் இவர் நடித்த குள்ளநரி கூட்டம் நல்ல வரவேற்பினை அளித்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மறைந்த நடிகர் வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை நானே ஏத்துக்கிட்டேன் - அவங்க குடும்பத்துக்கு நான் இருக்கேன் - விஷ்ணு விஷால் பேட்டி 1

விளம்பரம்

தொடர்ந்து வித்யாசமான படக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்களை கவர்ந்து வருகிறார்,அந்த வகையில் இவர் நடித்த இன்று நேற்று நாளை,ராட்சசன் படங்கள் மக்கள் மத்தியில் இன்று வரை நல்ல பெயரை பெற்றுள்ளது.இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார். விஷ்ணுவிஷால் தமிழில் இருந்து தற்போது தெலுங்கில் கால் தடம் பதித்துள்ளார். இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டா குஸ்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மறைந்த நடிகர் வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை நானே ஏத்துக்கிட்டேன் - அவங்க குடும்பத்துக்கு நான் இருக்கேன் - விஷ்ணு விஷால் பேட்டி 2

விளம்பரம்

இப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த விஷ்ணு விஷாலிடம்,வெண்ணிலா கபடி குழு மற்றும் குள்ளநரி கூட்டம் படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் வைரவன் இறப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது,கடந்த 6 மாதமாக வைரவன் கூட பேசிட்டு தான் இருக்கேன்,என்னால முடிஞ்ச உதவியை பண்ணிக்கிட்டு இருந்தேன்,அவரின் மனைவியிடம் போனில் பேசினேன்,அவர் குழந்தையின் படிப்பு செலவினை நானே ஏற்றுக்கொண்டேன் மேலும் வைரவன் எனக்கு அனுப்பிய ஆடியோ மெசேஜ் என்னிடம் உள்ளது,அதை கூட திரும்ப ஒருமுறை கேட்டேன் என கவலையாகிய கூறியுள்ளார்.

விளம்பரம்

Embed video credits : SHRUTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment