The Indian Times

வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை சனுஷா

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நடிகை சனுஷா.

இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் ரேணிகுண்டா. இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

Advertisement

இப்படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

இவர் பீமா மற்றும் அலெக்ஸ் பாண்டியன் படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சசிகுமார் நடிப்பில் வெளியாகிய கொடிவீரன் படத்திலும் அவருக்கு தங்கையாக நடித்து இருந்தார்.

தற்போது நடிப்பதை ஓரம்கட்டிய இவர் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார்.

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் யுனிவர்சிட்டியில் குளோபல் மெண்டல் ஹெல்த் அண்ட் சொசைட்டி மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் படிப்பை படித்து வந்த இவர் தற்போது படிப்பு முடிந்து பட்டம் பெற்று உள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in