தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். இவருக்கு “சின்னக்கலைவாணர்”என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில் காமெடி என்றாலே செந்தில் கவுண்டமணி தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் விவேக். காமெடி செய்தாலும் அதில் சமூக கருத்தையும் கலந்து செய்பவர் இவர். தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை விவேக்கிற்கு உண்டு.
விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ஸ்டைல் செய்து சில வீடியோக்களை பதிப்விட்டுளார். இவருக்கு மரம் நடுவதில் ஆர்வம் அதிகம் , நடிகர் மட்டுமல்லாது இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தவர் விவேக். இவரது பணியை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ என்ற விருதை இவருக்கு கொடுத்து கெளரவித்தது. இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லாது சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதரும் கூட.இந்த மாமனிதரின் இறப்பிற்கு பல நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இவர் இறுதியாக லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் பணியாற்றியுள்ளார். அதில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டலா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஊர்வசி ரௌட்டலாவுக்கு விவேக் dialogue சொல்லி தரும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஊர்வசி ரௌட்டலா, விவேக் அவர்களின் மறைவுக்கு இந்த விடியோவை வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
I will miss you forever my Padma Shri @actorvivekh sir 😞 My experience of working with a legend like you in my debut tamil film is unforgettable. I’m so shocked by the loss. You cared for me & cared for the world. Your comic timing & dialogues. Your love for the trees 🌲.😞 pic.twitter.com/3K2l86vvvF
— URVASHI RAUTELA🇮🇳 (@UrvashiRautela) April 18, 2021
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in