என் மனைவி பத்தி தப்பா பேசுன..தொலைச்சிடுவேன்..தொகுப்பாளரை ஓங்கி அறைந்த வில் ஸ்மித் | Will Smith

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தனது மனைவியைப் பற்றி உருவக்கேலி செய்து பேசியவரை வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே ஒருவர் தோற்றத்தை வைத்து உருவக்கேலி செய்வது என்பது மிக மோசமானது. அது கேலிக்கு உள்ளாகுபவர்களை மிகவும் காயப்படுத்தும். சிலர் வெளியில் காட்டிக் கொள்ளவிட்டாலும் மனதளவில் மிக பாதிக்கப்படுவார்கள். சமீபத்தில் கூட உயரம் குறைவாக பிறந்த ஒரு சிறுவன் பள்ளியில் சக மாணவர்களால் உருவக்கேலி செய்யப்பட்டதால் தன் தாயிடம் சென்று தன்னை கொன்றுவிடுமாறு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே போல் மனைவியின் தலை குறித்து உருவக்கேலி செய்த நிகழ்ச்சி தொகுப்பாளரை மேடைக்கே சென்று பளார் விட்ட வீடியோ சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

என் மனைவி பத்தி தப்பா பேசுன..தொலைச்சிடுவேன்..தொகுப்பாளரை ஓங்கி அறைந்த வில் ஸ்மித் | Will Smith 1

விளம்பரம்

நம் பிறப்பையும், இறப்பையும் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம் இல்லை என்று ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடியிருப்பார். அதே போல் நிறம்,உயரம், ஒல்லி, பருமன், கறுப்பு, சிகப்பு என எதையும் நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. இந்த பூமியில் நாம் பிறந்தது இறைவன் நமக்கு கொடுத்த கொடை. இறைவன் படைப்பில் அனைவரும் அழகுதான். அனைத்து ஜீவராசிகளும் அழகுதான். ஆனால் சிலர் வெளித்தோற்றத்தை வைத்து கிண்டல் அடித்து மகிழ்ச்சி காண்பர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடந்துள்ளது. YouTube Video Code Embed Credits: Polimer News

என் மனைவி பத்தி தப்பா பேசுன..தொலைச்சிடுவேன்..தொகுப்பாளரை ஓங்கி அறைந்த வில் ஸ்மித் | Will Smith 2

விளம்பரம்

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவி ஜடா ஸ்மித்துடன் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த காமெடியன் கிறிஸ் ராக் வில் ஸ்மித்தின் மொட்டை தலையை பற்றி கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் கடுப்பான வில் ஸ்மித் மேடைக்குச் சென்று தொகுப்பாளர் கிறிஸ்ஸை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அலோபீசியா என்னும் நோயால் பாதிக்கப்பட்ட ஜடா ஸ்மித்க்கு முடி உதிர்தல் பிரச்சனை உள்ளது. இதனால் அவர் முடிகளை இழந்து காணப்படுகிறார். அவரை கிறிஸ் உருவக்கேலி செய்ததால் கடுப்பாகியுள்ளார் வில் ஸ்மித். மேலும் தனது மனைவி குறித்து ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வரக்கூடாது எனவும் அவர் எச்சரித்தார். மனைவிக்காக அவர் செய்த இந்த செயலை நெட்டிசன்கள் பாரட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் பெண்களை தரக்குறைவாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் அவர்களை கிறிஸ் முகத்தில் பொருத்தி இவரையும் இப்படி ஒரு நாள் அடிக்க வேண்டும் என்று மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment