என்னோட 6 வருஷ கடின உழைப்பு.. ஒரே நாள்ல எல்லாம் போச்சு.. கண் கலங்கிய இர்ஃபான் | Irfan View

யூடியூப் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது சமையல்தான். யூடியூப் தொடங்க வேண்டும் என்றாலோ அல்லது யூடியூப்பை திறந்தாலோ எல்லாருக்கும் முதலில் வருவது சமையல்தான். அதுவும் குறிப்பாக பெண்கள், இல்லத்தரசிகளை சமையல் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் கவர்ந்துள்ளது . அதனால்தான் என்னவோ யூடியூப்பில் அத்தனை சமையல் சார்ந்த வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. சமைப்பது ஒரு கலை என்றால் அதை ரசித்து ருசித்து சாப்பிடுவது மற்றொரு கலை. ஒவ்வொரு ஊர்களாக சென்று அங்கு பிரபலமாக இருக்கும் ஓட்டலாக சென்று, அந்த உணவை ருசி பார்த்து Vlogs ஆக போடுபவர்தான் இர்ஃபான்.

என்னோட 6 வருஷ கடின உழைப்பு.. ஒரே நாள்ல எல்லாம் போச்சு.. கண் கலங்கிய இர்ஃபான் | Irfan View 1

விளம்பரம்

உணவு உண்ணவே பிடிக்காதவர்கள் கூட இவர் வீடியோவை பார்த்த பின்பு பசி எடுக்கிறது என்று சொல்லும் அளவிற்கு நாக்கில் எச்சல் ஊற வைத்து விடுவார் இர்ஃபான். ஒரு விழாவில் கமலஹாசன் கூட இர்ஃபானை பாராட்டி இருந்தார். அவரது வீடியோக்களை நான் ரசித்துப் பார்ப்பேன் எனக்கூறி இருந்தார். அந்த அளவுக்கு அனைவர் மத்தியிலும் பிரபலமானவர்தான் இர்ஃபான். இந்த நிலையில் இர்ஃபானுக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆகி இருந்தது. மிக கோலாகலமாக அந்த விழா நடந்து இருந்தது. ஆனால் திருமணம் நடைபெறவில்லை. தன்னுடைய திருமணத்தை தானே நிறுத்திவிட்டதாக அவர் அறிவித்து இருந்தார். Youtube Video Code Embed Credits: Irfan’sView Shorts

என்னோட 6 வருஷ கடின உழைப்பு.. ஒரே நாள்ல எல்லாம் போச்சு.. கண் கலங்கிய இர்ஃபான் | Irfan View 2

விளம்பரம்

தற்போது இவரின் சேனல் திடீரென முடக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு முதல் இவரின் யூடியூப் பக்கத்தை பார்க்க முடியவில்லை. Community Standard-ஐ மீறியதாலும், Youtube Guidelines-ஐ சரிவர பின்பற்ற முடியாமல் போனதாலும் இவரின் சேனல் முடக்கப்பட்டுள்ளதாக youtube தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை விளக்கி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் இர்ஃபான். அதில் என்னுடைய 6 வருட உழைப்பு ஒரே நாளில் வீணாகிவிட்டது என்று நா தழுதழுக்க அவர் கூறினார். அவர் பேசிய அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Video Below…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment