90களில் சினிமாவை கலக்கிய கதாநாயகன் அப்பாஸ்.இவருக்கு நடிகர் மாதவனை போல பெண்கள் ரசிகர்கள் ஏராளம்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர்.1996 ஆம் ஆண்டு வெளியாகிய காதல் தேசம் படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இதன்மூலம் அனைவர்க்கும் பரிட்சயமான நபராக மாறினார் நடிகர் அப்பாஸ்
ஆரம்பத்தில் இரண்டு கதாநாயகன்கள் உள்ள கதையில் நடித்து வந்த அப்பாஸ் பின்னர் கதாநாயகனாக மட்டும் நடிக்க தொடங்கினார்,ஆனால் இவர் கதாநாயகனாக நடித்த படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் தொடர்ந்து இரட்டை கதாநாயகர்கள் இருக்கும் படத்தில் நடித்து வந்தார்.நாளடைவில் அப்பாஸ் மார்க்கெட் இறங்கியது,படவாய்ப்புகள் சரியாக அமையாததால் நடிப்பிற்கு முழு இடைவெளி விட்டுவிட்டு வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகி விட்டார்.
தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதி ஆகி இருப்பது போல புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பாஸ்க்கு கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அப்பொழுது மருத்துவமனையில் வைத்து எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் இது.இந்த புகைப்படத்தினை ஏற்கனவே அப்பாஸ் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதை தெரிவித்துள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in