The Indian Times

ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி.

தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .

Advertisement

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றுது.

அண்மையில் இவருக்கு வெளியான ஜப்பான் படம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.

தற்போது தொடர்ந்து கதைகளை கேட்டு படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்துள்ளதாகவும், அவை விரைவில் திரைக்கு வர இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த தனது ரசிகர்களை நேரில் சந்தித்து உள்ளார் கார்த்தி.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in