The Indian Times

மருது பட வில்லன் RK சுரேஷ் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கொடூர வில்லனாக அறிமுகம் ஆகியவர் ஆர் கே சுரேஷ்.இப்படத்தில் இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் சுரேஷுக்கு வர தொடங்கியது.அதன்படி மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷாலின் மருது படத்தில் ரோலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

Advertisement

காண்பவர்களை கொலைநடுங்க செய்யும் வில்லனாக நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகனாக களம் இறங்கி இருக்கிறார்.பில்லா பாண்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

மேலும் நடிப்பில் மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார்.இவர் தயாரிப்பில் வெளியாகிய தர்மதுரை படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து அசத்தி வருகிறார்.இவர் நடிப்பில் அடுத்ததாக காடுவெட்டி திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படி தயாரிப்பு நடிப்பு என சினிமாவில் பெரும் பிசியாக இருந்து வருகிறார்.

தற்போது இவர் மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in