The Indian Times

இன்று குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய ரோபோ சங்கர்

முன்னணி நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். ஆரம்பத்தில் சிறு சிறு நிகழ்ச்சிகளில் வந்து இன்று சினிமாவில் ஜொலித்து வருகிறார்.

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்த இவர் தற்போது நகைச்சுவை நடிகராக தனது கடின உழைப்பினால் முன்னேறியுள்ளார்.

Advertisement

மேலும் அடிக்கடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

தற்போது இவரை போலவே இவரது மகள் இந்திரஜா சங்கரையும் சினிமாவில் களம் இறக்கி உள்ளார்.

இந்திரஜா பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படதில் நடித்து இந்திரஜா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றுள்ளார். இப்படங்களை தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார் இந்திரஜா.

குடும்பத்துடன் ரோபோ சங்கர் பிறந்தநாளை கொண்டாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in