நான் ஹீரோவாகத்தான் நடிக்க சினிமாவிற்கு வந்தேன்..பிரபல நகைச்சுவை நடிகரிடம் கூறிய சந்தானம்

விளம்பரம்
விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து படங்களில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி தமிழ் சினிமாவின் முன்னை நகைச்சுவை நடிகராக தோன்றிவிட்டார்.இவரது நகைச்சுவையை ராசிக்காதவர்கள் எவரும் இல்லை அந்த அளவிற்கு மக்களை சந்தோசப்படுத்தியவர் சந்தானம்.

கட்டாயம் படிக்கவும்  அனல்பறக்க வெளியாகிய ராகவா லாரன்ஸின் ருத்ரன் GLIMPSE

நான் ஹீரோவாகத்தான் நடிக்க சினிமாவிற்கு வந்தேன்..பிரபல நகைச்சுவை நடிகரிடம் கூறிய சந்தானம் 1

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்,இனி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என உறுதியாக உள்ளார் சந்தானம்.நகைச்சுவையாக நடிக்கும் படங்கள் கொடுத்த அளவிற்கு இவருக்கு ஹிட் ஆனது கதாநாயகனாக நடிக்கும் படங்களில் வரவில்லை. இவர் அடிக்கடி நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.தனது உடல் நிலை குறித்து பேட்டியளித்த வருகிறார் போண்டாமணி.இவர் நடிகர் சந்தனத்துடன் பல படங்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  டேய் விடுங்கடா என்னை... அமுதவாணனை தூக்கி தண்ணீரில் எறிந்த மணிகண்டன்.. | bigg boss promo

நான் ஹீரோவாகத்தான் நடிக்க சினிமாவிற்கு வந்தேன்..பிரபல நகைச்சுவை நடிகரிடம் கூறிய சந்தானம் 2

விளம்பரம்

பேட்டியின் பொழுது நடிகர் சந்தானத்தை பற்றி போண்டாமணியிடம் கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், நான் ஒருமுறை சந்தானத்திடம் நீங்கள் ஏன் நகைச்சுவை நடிகராக நடிக்காமல் ஹீரோவாக மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என கேட்டன்,அதற்கு சந்தானம் நான் ஹீரோவாக நடிப்பதற்காக தான் சினிமாவில் வந்தேன் என்னுடைய ஆசையை தான் நிறைவேற்றி வருகிறேன் என என்னிடம் கூறினார் என தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment