The Indian Times

மகனின் BISON படப்பிடிப்பை தொடங்கி வைத்த நடிகர் விக்ரம்

நடிப்பின் அரக்கன் என்றால் நடிகர் விக்ரமை சொல்லலாம்.காரணம் அந்தளவிற்கு நடிப்பின் மேல் வெறிகொண்டவர்,நடிப்பிற்காக எந்த அளவிற்கும் செல்ல கூடியவர் இவர்.

உதாரணமாக சொல்ல போனால் ஐ படத்தில் விக்ரம் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் அந்த அளவிற்கு உடல் எடை மெலிந்து நடித்துள்ளார்.

Advertisement

இதை விட இவர் நடிப்பின் அரக்கன் என்று சொல்வதற்கு வேறு எந்த உதாரணமும் தேவையில்லை.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

இவரின் மகன் தான் துருவ் விக்ரம்.அப்பாவை போலவே சினிமாவில் சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர்.இவர் நடிப்பில் வெளியாகிய முதல் படம் ஆதித்ய வர்மா,

இப்படம் தெலுங்கில் வெளியாகிய அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும்.இப்படத்தினை முதலில் இயக்குனர் பாலா தான் இயக்கி இருந்தார்,

ஆனால் அவர் இயக்கம் விக்ரமிற்கு திருப்தி அளிக்கவில்லை என்பதால் இயக்குனரை மாற்றி ஆதித்ய வர்மா என்ற படத்தினை இயக்கியுள்ளார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது துருவுக்கு,இப்படத்தினை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்தில் தந்தையுடன் சேர்ந்து நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது

Advertisement

தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in