ஏன் அழுவுறே….மேடையில் கதறிய கதாநாயகியை, கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய சாய் பல்லவி

வாய்ப்புக்காக போராடி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி திறமையால் மட்டும் இன்று முன்னேறி உச்ச நடிகை ஆக உருவெடுத்துள்ளவர் நடிகை சாய் பல்லவி.மருத்துவர் ஆன இவர் சினிமாவின் மேல் கொண்டுள்ள காதலால் வாய்ப்பு தேட துவங்கினார்.இதனால் ஆரம்பத்தில் பல நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்த இவருக்கு இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சூரி சசிகுமார் மிரட்டும் கருடன் பட ட்ரைலர் இதோ

ஏன் அழுவுறே....மேடையில் கதறிய கதாநாயகியை, கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய சாய் பல்லவி 1

விளம்பரம்

இவருக்கான சரியான வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.மேலும் தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கார்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ள.இப்படத்தினை இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  புது வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் செய்த சிங்கர் அஜய் கிருஷ்ணா

ஏன் அழுவுறே....மேடையில் கதறிய கதாநாயகியை, கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய சாய் பல்லவி 2

விளம்பரம்

இப்படத்தினை ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்துள்ளார்.இப்படத்தில் சாய் பல்லவி உடன் நடிகர் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது,மூன்று மொழிகளிலும் நடிகை சாய் பல்லவியே டப்பிங் பேசியுள்ளார்.இப்படம் ஜூலை 15 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு பேசிய நடிகையும் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா லட்சுமி ஆனந்தத்தில் பேச்சு வராமல் கதறி அழுதுள்ளார் உடனே சாய் பல்லவி எழுந்து சென்று அவரை சமாதானம் படுத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் CWC திவ்யா துரைசாமி WEEKEND கொண்டாட்டம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment