The Indian Times

அழகில் அசத்தும் நடிகை காயத்ரி சங்கரின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பல கதாநாயகிகளில் காயத்ரியும் ஒருவர்.தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இவர்.

பெரிய நடிகைகள் போல் ரசிகர்கள் கூட்டம் இல்லை என்றாலும் தனக்கான சிறிய வட்டத்தினை வைத்துள்ள திறமை மிக்க நடிகை காயத்ரி.2018 ஆம் ஆண்டு 188 வயசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.

Advertisement

இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இப்படத்திற்கு பிறகு இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.இப்படத்தின் மூலம் தான் விஜய் சேதுபதியும் காயத்ரியும் சினிமா ரசிகர்களால் அதிகம் அறியப்பட்டவர்கள் ஆகினர்.

இவர்களின் இந்த ஒற்றுமை தற்போது வரை நீடிக்கிறது.பல படங்களில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து அசத்தி விட்டார்.இவருக்கு ரம்மி,புரியாதபுதிர் படம் எல்லாம் நல்ல பெயரை அளித்தது.

உலகநாயகனின் விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.இந்த படத்தில் குறைந்த காட்சிகளே இவர் வந்திருந்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்

அண்மையில் விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஜோடியாக மாமனிதன் படத்தில் நடித்தார்.சீனு ராமசாமி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in