The Indian Times

பள்ளிப்பருவத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் எப்படி இருக்காங்க பாருங்க… வைரலாகும் புகைப்படங்கள்;

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் தான் தமிழ் படங்களில் தற்போது நடிக்காவிட்டாலும் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தில் இருப்பார்கள்.அதில் ஒரு கதாநாயகி தான் மீரா ஜாஸ்மின். தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் இவர்.இப்படத்திற்கு பிறகு மீரா ஜாஸ்மினுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக சினிமாவில் உருவெடுத்தார் மீரா ஜாஸ்மின்.

Advertisement

இவர் தமிழில் மட்டுமில்லை மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் அது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகிய சண்டக்கோழி படம் தான்.இப்படத்திற்கு தற்போது வரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தனது எதார்த்தமான குழந்தை போல நடிப்பினால் ரசிகர்களை தனது வசம் இழுத்தார் மீரா ஜாஸ்மின்.

Advertisement

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார் மீரா ஜாஸ்மின்.தற்போது இவர் பள்ளிப்பருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.அதில் தோழிகளுடன் பயங்கர குறும்பு செய்யும் குறும்பு பெண்ணாக உள்ளார் மீரா ஜாஸ்மின்,இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in