The Indian Times

அக்கா கல்யாணத்தை முன் நின்று நடத்திய அதிதி சங்கர்

கோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக ஜொலிப்பவரில் ஒருவர் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.

டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.

Advertisement

அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.

தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ளார் அதிதி.அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தற்போது அக்கா ஐஸ்வர்யா திருமணத்தை அதிதி சங்கர் முன்னின்று நடத்தியுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in