The Indian Times

விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம்.நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் இவர்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சாதரண நடிப்பு தானே அதற்கு இத்தனை மெனக்கெடல்கள் தேவையா என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்பவர்.1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து இவர் ரசிகர்களால் சீயான் என செல்லமாக அழைக்கப்பட்டார்.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்.தற்போது இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளது.இவர் திரையில் தோன்றி நீண்ட இடைவெளி ஆனதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.

Advertisement

தற்போது இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in