அமீருக்கு ராக்கின்னா உடனே கட்டிடுவேன் …எது ராக்கியா…பாவனியால் பதறிய அமீர்

பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.தனது சிறப்பான விளையாட்டால் மக்களின் கவனத்தினை ஈர்த்தவர்கள்.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது.இதுகுறித்து பாவனியிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று மறுத்துவிட்டார்.ஆனால் அமீர் பாவனியை காதலிப்பதாகத்தான் கூறி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இதற்கு ஒரு முடிவே இல்லாமல் இந்த காதல் கதை சென்று வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  இவ வீட்டுல இருந்து வந்துட்டா மட்டும் பொறாமை தான் படுவாங்க... மீனாவை அசிங்கப்படுத்திய விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

அமீருக்கு ராக்கின்னா உடனே கட்டிடுவேன் ...எது ராக்கியா...பாவனியால் பதறிய அமீர் 1

விளம்பரம்

தற்போது இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி வருகின்றனர்.இவர்கள் இருவரும் அறிமுக நிகழ்ச்சியிலேயே நடனத்தில் பட்டையை கிளப்பி ரம்யாகிருஷ்ணனிடம் நல்ல கருத்துக்களை பெற்றனர்.தற்போது இந்த வார நிகழ்ச்சியிலும் நடனத்தில் வெளுத்து வெளுத்து வாங்கி உள்ளனர்.பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் அமீர் பாவனியை காதலிப்பதாக கூறி சுற்றி சுற்றி வருகிறார்.பாவனி தனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் யோசிப்பதற்கு பின்னரே கூற முடியும் என அவர் அமீரிடம் தெரிவித்து வருகிறார்.இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டால் நன்றாகத்தான் இருக்கும் என ரசிகர்களும் விருப்பப்பட்டு வருகின்றனர்.இதனால் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் பாவனி என ரசிகர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கோமாளிகளுடன் பயங்கர VIBE செய்யும் VTV கணேஷ்... Cook With Comali promo

அமீருக்கு ராக்கின்னா உடனே கட்டிடுவேன் ...எது ராக்கியா...பாவனியால் பதறிய அமீர் 2

விளம்பரம்

தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பவானியின் உறவினர்கள் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்,கலந்துகொண்ட அவர் சகோதரிகள்,அமீருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர். அமீர் தேவதை போல பாவணியின் வாழ்வில் வந்துள்ளார்,பாவனியை சிரிக்க வைக்கிறார்,அவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறார்,அதனால் அமீருக்கு பரிசு கொடுக்கிறோம் என வாட்சினை பரிசாக அளித்துள்ளனர்.அதனை பாவனியை போட்டு விட கூறவே,ராக்கினு நினைச்சி போட்டுவிடு என பிரியங்கா சொல்லவே அமீர் கொஞ்ச நேரத்தில் ராக்கியா என பதறிவிட்டார் ,பின்னர் பாவனி அவருக்கு வாட்சினை கட்டியுள்ளார்.இந்த வீடியோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது .ரசிகர்களிடம் இந்த வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் இரண்டு மருமகள்களையும் ஓவர்டேக் செய்யும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VijayTelevision

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment