லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து அண்மையில் நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் களம் இறங்கிவிட்டார் நயன்
தற்போது இவர் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75வது படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்திற்கு அன்னபூரணி என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் ஜெய் ,ரெடின் கிங்ஸ்லி,சத்யராஜ் என பல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது
Embed Video Credits : SAREGAMA TAMIL
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in