அரண்மனை 3 படத்தின் First look | சுந்தர்.சி ஆர்யா விவேக்

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் வளம் வருபவர் சுந்தர்.சி. காமெடி படம் என்றால் அது சுந்தர் சி படம் தான். கலகலப்பு , கலகலப்பு 2 என்று இவர் படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. இதை தவிர்த்து ஆக்ஷன் , அரண்மனை போன்ற படங்களையும் இயக்கியுள்ளார் சுந்தர் சி . இவர் இயக்கிய பங்களிலேயே பெரியளவில் பேசப்பட்டது கலகலப்பு மற்றும் அரண்மனை ஆகிய படங்கள் தான். அரண்மனை 1 படத்தில் காமெடியும் , திகிலும் கலந்த சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்தது. அதன் பிறகு அரண்மனை படத்தின் 2ஆம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட கதாநாயகி காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்

அரண்மனை 3 படத்தின் First look | சுந்தர்.சி ஆர்யா விவேக் 1

விளம்பரம்

இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகமான அரண்மனை 3 படத்தின் first look தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை சுந்தர் சி இயக்கி நடித்தும் உள்ளார். மேலும் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்துள்ளார். மேலும் அரண்மனை 1 படத்தில் நடித்த ஆண்ட்ரியா நடித்துள்ளார். மறைந்த நடிகர் விவேக் , யோகிபாபு , மனோபாலா , சாக்ஷி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் first look வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment