The Indian Times

முதல் நாளே முரட்டு சம்பவம்..! Open Nomination நடத்தி சண்டை மூடிவிட்ட BiggBoss..! பிக் பாஸ் ப்ரோமோ இதோ

பிக் பாஸ் 8வது சீசன் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் முதல் நாளே வெளிப்படையான நாமினேஷன் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் போட்டியாளர்களுக்கு இடையே முதல்நாளே மோதல் தொடங்கி இருக்கிறது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in