The Indian Times

எனக்கு இந்த முடிவில உடன்பாடு இல்லை.. சண்டையிடும் ஜாக்லின்.. பிக் பாஸ் ப்ரோமோ..!

தமிழில் 7சீசன்களை வெற்றிகரமாக கடந்து 8வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கி உள்ளது.106 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்த முறை 18 போட்டியாளர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

Advertisement

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ஆண்களை நாமினேட் செய்ய கூடாது என டீலிங்கிற்கு பெண்கள் அனுமதித்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜாக்லின் கூறியுள்ளார். மேலும் தான் வெளியே சென்றாலும் பரவாயில்லை இதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என ஜாக்லின் ஆணித்தனமாக தனது முடிவில் உறுதியாக உள்ளார்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in