அவதார் – தி வாட்டர் ஆஃப் வே -சாதனையா அல்லது சோதனையா – திரை விமர்சனம் (?/5)

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த படம் அவதார்.இப்படத்திற்கு இன்று வரை பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போது சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகமான அவதார் – தி வாட்டர் ஆஃப் வே உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகியுள்ளது.பிரம்மாண்ட கிராபிக்சில் வெளியாகிய இப்படம் எப்படி இருக்கிறது என்பதனை கீழே உள்ள விமர்சனத்தில் காணலாம்.முதலில் அவதார் படத்தின் முதல் பகுதி கதையா தெரிந்து கொள்வோம்.

அவதார் - தி வாட்டர் ஆஃப் வே -சாதனையா அல்லது சோதனையா - திரை விமர்சனம் (?/5) 4

அவதார் பாகம் 1ன் கதைக்களம்

நாவி என்கிற இனம் பண்டோரா கிரகத்தில் வசித்து வருகிறது.அவர்களை விரட்ட ராணுவத்தின் உதவி மூலம் கதாநாயகன் ஜேக் நாவியாக உருமாறி கிரகத்திற்கு செல்கிறார்.அங்கு சென்ற பின்பு பண்டோரா கிரகத்தின் மீதும்,அங்குள்ள நாவிகள் மீதும் பாசம் காட்ட தொடங்கி விடுகிறார்.இதனை தெரிந்து கொண்ட ராணுவம் பண்டோரா மீது போர் தொடுக்கிறது.இந்த போரில் நாவிகள் வெற்றிபெறுகின்றனர்.வில்லன் Colonel Quaritchயை நெய்டிரி கொன்றுவிடுகிறார்.போரில் மீதமுள்ள மனிதர்களை திரும்ப கிரகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.சிலர் நாவிகளுடன் இணைந்து ,வாழ்கின்றனர். நாவிகளின் கடவுள் ஈவா மூலம் மனித உடலில் இருந்த ஜேக் முழு நாவியாக மாறுகிறார்.இத்துடன் முதல் பாகம் நிறைவு பெறுகிறது.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கோவப்பட்டு கத்திகொண்டே வந்த மீனாவால் ரசிகர்கள் அதிர்ச்சி...

அவதார் - தி வாட்டர் ஆஃப் வே -சாதனையா அல்லது சோதனையா - திரை விமர்சனம் (?/5) 5

அவதார் பாகம் 2 – தி வாட்டர் ஆஃப் வேகதைக்களம்

கதாநாயகன் ஜேக் நான்கு பிள்ளைகளுடன் மனைவி நெய்டரி உடன் மகிழ்ச்சியாக பண்டோராவில் வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் மீண்டும் பண்டோராவில் மீண்டும் கால் தடம் பதிக்கிறது ராணுவம்.இந்த முறை பண்டோராவை கைப்பற்றியோயே ஆகவேண்டும் என கொள்கையுடன் வந்துள்ளது.கடந்த பாகத்தில் இறந்துபோன Colonel Quaritch இந்த முறை தனது நினைவுகளை நாவி உடலுக்குள் செலுத்தி மீண்டும் உயிர்பெற்று வருகிறார்.ஒரு கட்டத்தில் ஜேக் மகன் மற்றும் மகள் மற்றும் Colonel Quaritch மகன் மைல்ஸ் ஆகியோர் Colonel Quaritchஇடம் மாட்டிக்கொள்கின்றனர்.அதில் ஜேக் தனது மகன் மற்றும் மகளை காப்பாற்றிவிடுகிறார்.ஆனால் மைல்ஸ் கைதியாக சிக்கி விடுகிறார்.உடனே கதாநாயகன் ஜேக் தனது குடும்பத்துடன் தப்ப்பித்து கடல் வாசி நாவிகளிடம் அடைக்கலம் கேட்டு தஞ்சம் புகுகிறார்.கதாநாயகன் ஜேக்கை Colonel Quaritch வெறித்தனமாக தேடி வருகிறார்.இந்நிலையில் ஜேக் குடும்பத்தின் சிலர் வில்லனிடம் சிக்கி கொள்ளவே,மீண்டும் ஜேக் எப்படி போராடி ஜெயிக்கிறார்,குடும்பத்தினை காப்பாற்றினாரா? வில்லனை கொன்றாரா என்பதே மீதி படத்தின் கதை

கட்டாயம் படிக்கவும்  சீக்கிரம் வாடா... விக்னேஷ் கையை இறுகப்பிடித்து நடந்து சென்ற நயன்தாரா

அவதார் - தி வாட்டர் ஆஃப் வே -சாதனையா அல்லது சோதனையா - திரை விமர்சனம் (?/5) 6

படத்தின் விமர்சனம்

ஜேம்ஸ் கேமரூன் இத்தனை வருட இடைவெளி விட்டிருந்தாலும் தரமான சினிமா உடன் தான் மீண்டும் கால் தடத்தினை பதித்துள்ளார். நாவிகள் கதாபாத்திரத்தினை கட்சிதமாக வடிவமைத்துள்ளார்.அதிலும் குறிப்பாக கடல் நாவிகள் என்ற ஒன்றை கொண்டு வந்து அசதியெடுத்துள்ளார்.கிராபிக்ஸ் காட்சிகளில் அதிரடி காட்டியுள்ளார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.கதாநாயகன் மற்றும் கதாநாயகி தங்களது சிறந்த நடிப்பினை காண்பித்துள்ளார்கள்.படத்தில் வேலை செய்த அணைத்து துறைகளும் தங்களது 100 சதவீத உழைப்பினை கொடுத்துள்ளது.படத்தில் இருக்கும் நெகட்டிவ் என்று பார்த்தால் படத்தின் நீளமாகத்தான் இருக்கும்,அதை மட்டும் கொஞ்சம் சுருக்கி இருந்தால் இன்னும் படம் பிரமாதமாக தான் வந்திருக்கும்.வழக்கத்தை விட 3டி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவத்தினை கொடுத்து எடுத்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன் .மொத்தத்தில் இப்படம் கண்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  என் ரசிகர்கள் வந்திருக்காங்களா?... காத்திருந்த ரசிகர்களுக்காக ஓடி வந்த நயன்தாரா... காரின் மீது ஏறி ரசிகர்களுக்கு டாடா காட்டிய நயன்

அவதார் – தி வாட்டர் ஆஃப் வே படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் 3/5

Leave a Comment