The Indian Times

மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV தங்கதுரை

விஜய் தொலைக்காட்சியில் சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆகி இன்று பலருக்கும் பிடித்த பிரபலமாக இருப்பவர் தங்கதுரை.தனது நகைச்சுவை திறமையால் மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர் இவர்.

இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கோமாளியாக மக்களை சிரிக்க வைப்பார்.

Advertisement

இவரின் நகைச்சுவையை கண்டு பயந்து ஓடாதவர்கள் எவரும் இல்லை,அதுவே இவரை அதிகமாக ரசிக்கும்படி செய்கிறது.பயோ டெக்னலாஜி படித்திருந்தாலும் கலை மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேடி சின்னத்திரைக்குள் நுழைந்தார் தங்கதுரை.

டிவிக்களில் மட்டும் மக்களை சிரிக்க வைக்காமல் வெளியூர்களில் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை மகிழ்விப்பார் தங்கதுரை.

இவரை பலர் கலாய்த்தாலும்,இவரது ஜோக்குகளை பற்றி தவறாக பேசினாலும் எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் அதையும் நகைச்சுவையாக மாற்றும் நல்ல குணம் கொண்டவர் தங்கதுரை.

இவரை அனைவரும் முதலில் டைகர் கார்டன் தங்கதுரை என்று தான் அழைப்பார்கள் காரணம் இவர் சென்னை புளியந்தோப்பில் வசித்து வருவதால்.

கல்லூரியில் படிக்கும் பொழுதே ஸ்டாண்ட்அப் காமெடி,கானா பாடல் என பல திறமைகளை தன்னுள் கொண்டவர்.தற்போது படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து வருகிறார் தங்கதுரை.

Advertisement

தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in