The Indian Times

என் வீட்டோட திருட்டு சாவியை குடுடா கோபி.. கோபி மற்றும் ராதிகாவை அலறவிட்ட பாக்கியலட்சுமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் கோபி இனியாவின் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்காக இனியாவை கேரளா அழைத்து செல்ல இருக்கிறார்,இதனால் அப்பாவுடன் டூர் செல்லும் மகிழ்ச்சியில் இனியா தயாராக இருக்கிறார்.மேலும் வீட்டில் உள்ளவர்களுடனும் அப்பாவுடன் டூர் செல்வதாக கூறி வருகிறார்,இறுதியாக கோபியால் வர முடியாமல் போகிறது ,இதனால் பாக்கியாவை அழைத்துக்கொண்டு செல்கிறார்,பாக்கியா போலீசிடம் மாட்டுகிறார் அவரை லைசென்ஸ் இல்லையென போலீஸ் பிடித்து வைக்கவே தாத்தா வீட்டிற்கு லைசென்ஸ் எடுக்க வருகிறார்,இதனை கேள்விப்பட்ட கோபி அவர்களுக்கு முன்னாலேயே திருட்டு சாவி போட்டு வீட்டுக்குள் வந்து பாக்கியா லைசென்ஸை திருடி செல்கிறார்,

Advertisement

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,இதுகுறித்து கேள்விப்பட்ட பாக்கியா கடும் கோபத்துடன் கோபி வீட்டிற்கு சென்று அவரை மிரட்டி வீட்டின் சாவியை கேட்கிறார்,கொடுக்க முடியாது என கோபி கூறவே பயங்கர காண்டாகி போலீசிடம் போவேன் என கூறவே இறுதியாக சாவியை கோபி பாக்கியா கையில் கொடுக்கிறார்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in