தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் தான் சுசித்ரா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவரின் நடிப்புக்கு உள்ள ரசிகர்கள் கூட்டம் ஏராளம்,இவர் கன்னடத்தில் மாங்கல்யா என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர்.பின்னர் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய சைவம் படத்திலும் நடித்திருந்தார்.இப்படி படிப்படியாக முன்னேறி இன்று பாக்கியலட்சுமி சீரியலில் வாய்ப்பு கிடைத்து அசத்தி வருகிறார்.அண்மையில் சென்னையில் இவர் தனது குடும்பத்திற்காக சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகியது.
மேலும் இவர் அடிக்கடி நடனமாடி வெளியிடும் வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாவது உண்டு. அதன்படி தற்போது இவர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இவரின் நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர். பாக்கியா நீங்களா இது அவ்வளவு அமைதியா இருப்பீங்க,ஆட்டம்னு வந்துடுன்னா அதிரடி காட்டிட்டீங்களே என கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.