The Indian Times

மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனாவுக்கு செயின் எடுக்க வேண்டும் என்று முத்து மற்றும் அண்ணாமலை கூறுகின்றனர். இதனால் விஜயா தங்கத்திற்கு பதில் கவரிங் நகைகளை கொடுத்து முத்து மற்றும் மீனாவை கடைக்கு அனுப்புகிறார். அங்கு விஜயா கொடுத்தது கவரிங் என தெரியவரவே கடுப்பாகி முத்து வீட்டுக்கு வருகிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ப்ரோமோவில், ரோகிணியை ஏமாற்றி மனோஜ் செய்த மோசடியை, முத்து குறும்படமாக போட்டு காண்பித்து உள்ளார். இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். மேலும் முத்து பேசமுடியாமல் தவித்து உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Embed Video Credits : Vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in