பகை முடித்தானா பகாசூரன் – திரை விமர்சனம் (?/5)

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகியவர் மோகன் ஜி .இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய திரௌபதி,ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கி நல்ல வரவேற்பினை பெற்றார்,எந்தளவுக்கு நல்ல வரவேற்பினை பெருகிறாரோ அதே அளவுக்கு விமர்சனங்களையும் பெற்றுள்ளார்.தற்போது இவர் செல்வராகவன்,நட்டி ஆகியோரை வைத்து பகாசுரன் படத்தினை இயக்கியுள்ளார்,இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படத்தின் விமர்சனத்தினை கீழே காணலாம்

பகை முடித்தானா பகாசூரன் - திரை விமர்சனம் (?/5) 1

விளம்பரம்

படத்தின் கதை

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியாக வருகிறார் நட்ராஜ், இவர் யூடியூபில் கிரைம் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் இவரது அண்ணன் மகள் திடீரென தற்கொலை செய்துகொள்கிறார்.ஆனால் போலீஸ் விருப்பம் இல்லாமல் கல்யாணம் நடத்த திட்டமிட்டுள்ளதால் அவர் உயிரிழந்துள்ளதாக கேஸை மூடியது.அண்ணன் மகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும்,கல்யாணம் முடிந்த பிறகும் இந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என அவரை ஒரு கும்பல் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பதை அறிகிறார் நட்ராஜ்,இதனால் ஆவேசத்துடன் அந்த கும்பலை தேடி செல்கிறார்.இவரை போல இன்னொரு பக்கம் செல்வராகவனும் பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்துவர்களை தேடி தேடி கொன்று வருகிறார்.செல்வராகவனுக்கு படத்தில் மிகப்பெரிய பிளாஷ்பேக் உள்ளது.இவ்வாறு ஒரே நோக்குடன் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் நட்ராஜ் மற்றும் செல்வராகவன் சந்திக்கின்றனர்,இதற்கு அடுத்து என்ன நடக்கிறது என்பதே மீதி கதை

விளம்பரம்

பகை முடித்தானா பகாசூரன் - திரை விமர்சனம் (?/5) 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

செல்வராகவன் ஒரு நல்ல அப்பாவாகவும் எதிரிகளை துவம்சம் செய்யும் பொழுது உண்மையிலேயே ஒரு பகாசூரனாகவும் கண்களில் நிற்கிறார்.பாசம் பகை என்பதை வெவ்வேறு கோணங்களில் காட்டி அசத்தியுள்ளார். பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் ஒவ்வொருவரையும் தேடி கொள்வது படத்தின் சுவரசியத்தினை கூட்டியுள்ளது.நட்டி நட்ராஜ் தனது சிறந்த நடிப்பினை காண்பித்து அசத்தியுள்ளார்.செல்வராகவன் பெண்ணாக நடித்துள்ள தாராக்சி சிறப்பாக நடித்துள்ளார். செல்வராகவன் கதையை எடுத்துக்கூறும் பொழுது பார்ப்பவர்களுக்கு கண்ணீரே வந்துவிடுகிறது.படத்தில் சாம் சி எஸ்-ன் பின்னணி இசை பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது.அடுத்து என்ன நடக்கும் என்ற முதல் பாகத்தின் சஸ்பென்ஸ் படத்தின் இரண்டாவது பாதியில் இல்லாதது பெரும் ஏமாற்றத்தினை அளிக்கிறது.செல்போன்களால் ஏற்படும் பிரச்சனைகளை இயக்குனர் மோகன் ஜி விழிப்புணர்வு போன்று ஏற்படுத்தியுள்ளார் இதற்கே பெரும் பாராட்டுக்களை இயக்குனருக்கு கொடுக்க வேண்டும்.முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் இல்லாதது படத்திற்கு பெரும் அடியை கொடுத்துள்ளது.மொத்தத்தில் இப்படம் பெண்குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் பார்க்க கூடிய படம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை

பகாசூரன் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங்- 2.5/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment