The Indian Times

கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் ஆயிஷா

விஜய் தொலைக்காட்சியில் ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சி மூலம் தான் முதல் முறையாக கேமிராவை சந்தித்து சின்னத்திரையில் தோன்றியவர் ஆயீஷா.

பின்னர் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.அதனை தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு ரசிகர்களிடம் அங்கீகாரம் கொடுத்தது ஜீ தமிழில் இவர் நடித்து வந்த சத்யா என்ற சீரியல் தான்.

Advertisement

தற்போது வரை இவரை ரசிகர்கள் சத்யா என்று தான் அழைத்து வருகிறார்கள் அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.பின்னர் டிக் டாக்கில் மிக பிரபலம் ஆகினார்.

மேலும் லட்ச கணக்கானோர் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.தற்போது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். போட்டியாளர்களிடம் அவ்வப்பொழுது வெடித்து சிதறி வருகிறார் ஆயீஷா.

பின்னர் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை அளித்து ,வருகின்றனர்.

Advertisement

தற்போது இவர் தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in