The Indian Times

சாமியை கொன்னுட்டேன்.. வித்தியாசமான கதைக்களத்தில் விமல் நடிக்கும் சார் படத்தின் டீசர் வெளியாகியது

கில்லி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் விமல். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த விமல் கதாநாயகனாக பசங்க படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த களவாணி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் விமல். டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடித்த வாகை சூடவா படத்திற்கு சிறந்த நடிகர் என்ற தமிழக விருதினை பெற்றார் விமல்.இந்நிலையில் பல வெற்றிப்படங்களை கொடுத்து மேல வந்த விமலுக்கு படங்கள் சரியாக ஓடாமல் பெரும் சரிவினை கொடுக்க தொடங்கியது.இதில் இருந்து மீண்டும் வர விமல் போராடியும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது,இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் படங்களை நடித்து வருகிறார்,அந்த வரிசையில் இவர் அண்மையில் நடித்த விலங்கு வெப் சீரிஸ் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இவர் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் சார் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : SSS PICTURES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in