The Indian Times

கதாநாயகி போல மாறிய பிக் பாஸ் இசைவாணி

ஆண்கள் மட்டும் தான் கானா பாட வேண்டுமா ஏன் பெண்கள் பாடக்கூடாதா பெண்களாலும் முடியும் என கானா பாடகியாக உருவெடுத்தவர் இசைவாணி. கானா பாடல்களில் சிறந்து விளங்குபவர் இவர்.

பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் தனது குழுவுடன் கானா பாடி அசத்தியவர் இவர்.இவர் பாடும் கானா பாடல்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

ஒவ்வொருவருக்கும் ஒன்றின் மேல் காதல் உண்டு இவருக்கு கானா மேல் தான் அதிக காதல்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சிங்கிங் ஸ்டார்ஸ் என்ற இசை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று அசத்தினார்.

மேலும் சினிமாவிலும் தற்போது சில கானா பாடல்களை பாடி வருகிறார் இசைவாணி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார்.

நீண்ட நாட்கள் உள்ளே இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 49 வது நாளே குறைவாக வாக்கு வித்தியாசத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.தற்போது சினிமாக்களில் மட்டுமில்லாமல் இசை நிகழ்ச்சிகளிலும் பாடல் பாடி வருகிறார்.தற்போது இவர் லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in