பிக் பாஸ் வின்னர் ராஜுவுக்கு வாரிசில் கிடைத்த வாய்ப்பு…

வாய்ப்பு தேடி சென்னை வந்த இளைஞர்களில் ஒருவர் ராஜு.இவருக்கு அதிர்ஷ்டவசமாக பாக்கியராஜிடம் அறிமுகம் கிடைக்கவே அவரை பின்தொடர ஆரம்பித்தார்.விஜய் தொலைக்காட்சியில் நாடகங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.இதில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ராஜு இந்த சீசனில் வெற்றிபெற்று பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை தட்டி தூக்கி சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  தோழி பிருந்தா மாஸ்டர் உடன் விருந்துக்கு சென்ற நடிகை குஷ்பு

பிக் பாஸ் வின்னர் ராஜுவுக்கு வாரிசில் கிடைத்த வாய்ப்பு... 1

விளம்பரம்

தற்போது இவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் அசத்தினார்.மேலும் இவருக்காக விஜய் தொலைக்காட்சி ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியையும் நடத்தியது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்த நிலையில் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ராஜுவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இருப்பினும் தன்னம்பிக்கையுடன் தனக்கான இடத்தினை பிடிக்க ராஜு போராடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்பா

பிக் பாஸ் வின்னர் ராஜுவுக்கு வாரிசில் கிடைத்த வாய்ப்பு... 2

விளம்பரம்

இந்நிலையில் ராஜுவுக்கு தளபதியின் வாரிசு படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்ச் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது,அதனை ராஜு தான் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.இதுவரை இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் ராஜு தொகுத்து வழங்கினால் நிச்சயம் நன்றாக இருக்கும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகலாம் என தகவல்கள் கசிந்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment