பாலாவின் அம்மாவை பாருங்க.. அப்படியே தாமரை மாதிரி இல்லை.. பாலா-தாமரை Cute வீடியோ | Bigg Boss Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டு வெற்றிகரமாக நடைபற்று வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் என அறிவித்திருந்த நிலையில் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இது பிக்பாஸ் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

பாலாவின் அம்மாவை பாருங்க.. அப்படியே தாமரை மாதிரி இல்லை.. பாலா-தாமரை Cute வீடியோ | Bigg Boss Ultimate 1

விளம்பரம்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வாரத்திலேயே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளார். பரணி மற்றும் ஓவியா Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்குறது

பாலாவின் அம்மாவை பாருங்க.. அப்படியே தாமரை மாதிரி இல்லை.. பாலா-தாமரை Cute வீடியோ | Bigg Boss Ultimate 2

விளம்பரம்

 

முந்தைய சீன்களில் இருந்து தற்போது பாலாஜி முருகதாஸ் முற்றிலும் வேறுபட்டு உள்ளார். முன்பு ரூல்ஸ்-ஐ மீறுவது. தேவையில்லாமல் சண்டை போடுவது என்று பக்குவம் இல்லாமல் நடந்து கொண்ட பாலா வெளியே பல எதிர்ப்பாளர்களை சம்பாதித்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் பாலாவிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதை காண முடிகிறது. குறிப்பாக ஜூலியை மற்ற ஹவுஸ் மேட்ஸ் ஒதுக்கும் போது பாலா மட்டுமே ஆதரவாக உள்ளார். குறிப்பாக தாமரை பாலா நட்பு பார்க்கவே தாய்-மகன் உறவு போல உள்ளது. பாலாவின் தாயார் சிறு வயதில் தாமரை போலவே உள்ளார். தற்போது தாமரை பாலாவிடம் காட்டும் அன்பு, அவருக்கு ஊட்டி விடுவது போன்ற நிகழ்வுகள் பாலா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment