வனிதாவை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு அவரை போலவே மிமிக்கிரி செய்து அசத்திய தாமரை..| BiggBoss Ultimate Feb12 Promo 3
பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டு வெற்றிகரமாக நடைபற்று வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் என அறிவித்திருந்த நிலையில் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இது பிக்பாஸ் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வாரத்திலேயே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளார். பரணி மற்றும் ஓவியா Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்குறது. Youtube Video embed code credits: Disney + hotstar Tamil

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக்பாஸ் தாமரையிடம் நீங்கள் இதுவரை அபிராமியின் குரலாக ஒலித்தது போதும். இனிமேல் நீங்கள் வனிதாவாக மாரி அவரது குரலாக ஒலிக்க வேண்டும் என்று கூறுகிறார். வனிதா சொல்லி கொடுக்க கொடுக்க வனிதா மாதிரியே பண்ணி காட்டுகிறார் தாமரை. மிகவும் காமெடியாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண .. Watch Bigg Boss Ultimate Promo Below..
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in